“ஏழை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை தொடர்ந்து வழங்க வேண்டும்” – தமிழக அரசு உத்தரவு..!

20 August 2020, 12:27 pm
Quick Share

சத்துணவு திட்டத்தின் கீழ் அரசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுகளை தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்குங்கள் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் கடந்த 1982-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது சத்துணவுத் திட்டம். இந்த திட்டம், பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வகைசெய்தல். ஊட்டச்சத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவு வழங்குவதன் மூலம் கல்வித்தரத்தை மேம்படுத்துதல்.

பள்ளி பயிலும் மாணவ, மாணவியர் கல்வி இடைநிறுத்தம் செய்வதை தடுத்திடுதல். போன்ற முக்கிய நோக்கங்களை அடிப்படையாக கொண்டு வரையாறுக்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொடர்ந்து சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவிலும் முழு ஊரடங்கு உத்தரவு இன்று வரை அமலில் உள்ளது. இதனால், நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தசூழலில் பொதுமக்கள் வேலை இன்றி தவித்து வருவதாலும், அவர்களின் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாலும் ஏழை மாணவர்களுக்கு சத்தான உணவு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சத்துணவு திட்டத்தின் கீழ் அரசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுகளை தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்குங்கள் என அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனால், ஏழை மாணவர்களின் உட்டச்சத்து குறைபாட்டை கட்டுப்படுத்த முடியும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0