‘லீவு விடுங்க.. படிச்சு படிச்சு பைத்தியம் ஆயிடுச்சு’: முகநூலில் மாணவர்களின் குறும்புத்தனம்.. சலிக்காமல் பதிலளித்த ஆட்சியர்..!!

Author: Babu Lakshmanan
12 October 2022, 7:45 pm
Quick Share

பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்குமாறு முகநூலில் மாணவர்கள் கோரிக்கை விடுத்ததற்கு, புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவும் பதிலளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் கலெக்டராக இருப்பவர் கவிதாராமு. இவர் சமூக வலைத்தளங்களிலும் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார். கடந்த சிலர் தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது.

கடந்த 10ந் தேதி மழையின் காரணமாக மாணவ, மாணவிகள் பாதிக்க கூடாது என்பதற்காக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்தார்.

வளிமண்டல குறைந்த தாழ்வு அழுத்தம் காரணமாக கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கோரி அந்த குறும்புக்கார மாணவர் தொடர்ந்து கலெக்டரை எஸ்எம்எஸ் செய்து நச்சரித்து உள்ளார் அதனை கலெக்டர் கவிதா ராமுவும், சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் டேக் இட் ஈஸி பாலிசியில் மாணவர்களின் குறும்புத்தனத்தை ரசித்து தனது முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார்.

அந்தக் காலத்தில் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு பயப்படும் மாணவர்கள் மத்தியில் தற்பொழுது கலெக்டரிடமே லீவு கேட்கும் மாணவர்களின் துணிகர செயல் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கி உள்ளது.

Views: - 448

0

0