பள்ளி ஆசிரியை தாலி செயின் பறிப்பு.. மண்ணுக்குள் புதைத்து வைத்து புள்ளிங்கோ : கையோடு கைவிலங்கு போட்ட போலீஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan27 ஜூலை 2022, 12:58 மணி
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பள்ளி ஆசிரியையின் தாலி செயினை பறித்து விட்டு தப்பிச்சென்ற இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்கள் பதுக்கி வைத்திருந்த தாலி செயினை கைப்பற்றி இளைஞர்களை சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள காளவாய்பட்டி நடுநிலை பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் ராதா என்ற ஆசிரியை கடந்த 20ம் தேதி மதியம் மண்ணச்சநல்லூரில் இருந்து ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள் ராதா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தாலி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட மண்ணச்சநல்லூர் தாலுக்கா, சுணைப்புகநல்லூரை சேர்ந்த 22 வயதான திலகன் என்கிற மணி அவரது நண்பரான புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த 22 வயதான முருகானந்தம் ஆகிய 2 இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் மின் கம்பத்தின் கீழ் பகுதியில் குழிதோண்டி புதைத்து பதுக்கி வைத்திருந்த தாலி செயினை போலீசார் கைப்பற்றினர்.
0
0