கரூர் : கரூர் அருகே பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் 17 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த மாணவிக்கும் திருப்பூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மேலும், அந்த மாணவியை குமார் திருமணம் செய்வதாக கூறி பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த தகவல் மாணவி வசித்து வரும் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் வேலை பார்த்து வரும் மாரிமுத்து( 35) என்பவருக்கு தெரிய வந்துள்ளது.
இதையடுத்து மாரிமுத்து இந்த தகவலை வெளியே சொல்லி அம்பலப்படுத்துவேன் எனவும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக் கூறி மிரட்டி மாணவியிடம் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவி தற்போது 8 மாத கர்ப்பணியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த மாணவி கரூர் அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்த வழக்கில் மெக்கானிக் மாரிமுத்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், தலைமறைவாக உள்ள காதலன் குமாரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட காதலை வைத்து பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா பட வில்லன் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த “சூரரைப் போற்று” திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்தவர்…
திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு நாட்டார் ஸ்ரீதேவ் என்ற மகனும்…
90ஸ் கிட்ஸை கதிகலங்கவைத்த தொடர் 1990களின் பிற்பகுதியில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “விடாது கருப்பு” தொடரை 90ஸ் கிட்ஸால் மறந்திருக்க…
ஆபரேஷன் சிந்தூர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரின் கீழ் இந்திய இராணுவம் பாகிஸ்தான்…
சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, பிரபலமாகிவிட்டு திருமணத்திற்கு பிறகு…
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து கூருகிறது. எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆந்திராவை சேர்ந்த ராணுவ…
This website uses cookies.