புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடல் : கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு…!!

Author: kavin kumar
9 January 2022, 6:44 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை முதல் மறு அறிவிப்பு வரை 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா தினசரி பாதிப்பு 300-ஐ தாண்டியுள்ளது. இதனால் கட்டுப்பாடுகளை திவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா பரவல் எதிரொலியால் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் புதுச்சேரியில் எந்தவித தடைகளும் விதிக்கப்படவில்லை, இதனால் புத்தாண்டு தினத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் புத்துச்சேரி கடற்கரையில் கூடி புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இதுவே புதுச்சேரியில் வைரஸ் பரவல் அதிகரிக்க காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.அதோடு கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் தமிழகத்திலும், கடந்த 5 ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றனர். பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரியில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டாலும், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

Views: - 420

0

0