புதுச்சேரியில் நவம்பர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பு :தமிழிசை சௌந்தரராஜன் அறிவிப்பு

Author: kavin kumar
24 October 2021, 3:58 pm
Quick Share

புதுச்சேரி:புதுச்சேரியில் 100 சதவீத தடுப்பூசி பெற்ற மாநிலமாக உருவாக்க நாளை மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக உருவாக்க புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், கல்வித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், புதுச்சேரி மாநிலத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக உருவாக்க அரசு எடுத்த துரித நடவடிக்கையில் இன்னும் இரண்டு லட்சம் பேர் தடுப்பூசி போடவுள்ளது.

ஆகவே அவர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாகவும், மூன்றாவது வருமா வராதா என்ற நிலையில் இரண்டாம் அலை இன்னும் முடிவு பெறவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுவதால் தடுப்பூசி ஒன்றே இதற்கு தீர்வாகும் என்றார்.மேலும் புதுச்சேரி மாநிலத்தில் நவம்பர் முதல் வாரத்தில் ஒன்று முதல் 8 ஆம் வகுப்புகள் தொடங்கப்பட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுவதாகவும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுள்ளதால் அரசு பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருப்பதாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

Views: - 245

0

0