வில்வித்தை வீரருக்கு அரிவாள் வெட்டு : பதைபதைக்க வைத்த காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2021, 3:50 pm
Crime - Updatenews360
Quick Share

சென்னை : வில் வித்தை வீரர் பயிற்சிக்காக சென்ற போது மர்மநபர் அரிவாளால் வெட்டி தப்பியோடிய காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆழ்வார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா (வயது 23). இவர் தமிழக அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்று வந்துள்ளார். ஐ.சி.எப் நார்த் காலனி பகுதியில் பயிற்சிக்காக ஆதித்யா வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த 25 வயதுள்ள வாலிபர் ஆதித்யாவிடம் சுமார் 20 நிமிடம் பேசிய நிலையில் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் ஆதித்யாவை வெட்டியுள்ளார்.

இதில் ஆதித்யாவின் மூக்கு, மேல் உதடு வெட்டப்பட்ட நிலையில் மர்ம நபர் தொடர்ந்து தலை, முதுகு, கால் பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த ஐ.சி.எப் போலீசார் ஆதித்யாவை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
மேலும் மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 181

0

0