சென்னை அருகே ஊருக்குள் புகுந்த கடல் நீர்.. கணவரை தேடி அலைந்த பெண் : கடல் நீர் சூழ்ந்ததால் கதறிய காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2022, 10:08 pm
Uthandi - Updatenews360
Quick Share

மாண்டஸ் புயல் எதிரொலியால் சென்னை உத்தண்டி பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

ஜீவா தெரு, பேபி அவின்யூ, விஜிபி 2வது தெரு உள்ளிட்ட இணை தெருக்களில் கடல் நீர் புகுந்துள்ளது. பலத்த காற்று வீசுவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக இந்த பகுதியில் 3 முதல் 4 மீட்டர் இருக்கும் கடல் சீற்றம் தற்போது 7 முதல் 8மீ வரை உள்ளது. இந்த பகுதியில் மீனவ கிராம மக்கள் அதிகமாக உள்ளனர்.

ஒரு பெண்மணி அழுது கொண்டே சென்ற காட்சிகள் இணையத்தில் பரவி உள்ளது. கணவர் மாலை முதல் காணவில்லை என்பதால் அவரை தேடி பெண் அந்த பகுதிக்குள் சென்றுள்ளார்.

இந்த பகுதி அபாயகரமான பகுதி யாரும் வரக்கூடாது என அறிவிக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த பெண்மணி கணவரை காணவில்லை என அலைந்து தேடிய காட்சிகள் காண்போர் கண்களில் கண்ணீர் வரவைத்துள்ளது.

Views: - 194

0

0