தருமபுரி: ஏரியூர் அருகே சொத்துக்காக முதல் மனைவியை இரண்டாவது மனைவி மண்ணெண்னை ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த சிடுவம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கிரு~;ணன் (வயது 75) இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ரஞ்சிதம் (70) இவருக்கு குழந்தைகள் இல்லாததால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவி ராமி (வயது 45). இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். முதல் மனைவி ரஞ்சிதம் பெயரில் சுமார் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது.
அதை இரண்டாவது மனைவி ராமி ரஞ்சிதத்திடம் தான் அந்த நிலத்திற்கு 5 லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும் அதை பெற்றுக்கொண்டு தன் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்று கேட்டு வந்துள்ளார். அதற்கு ரஞ்சிதம் மறுத்து வந்த நிலையில் இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் இரண்டாவது மனைவி ராணி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து வந்து வீட்டுக்கு வெளியில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ரஞ்சிதம் மீது ஊற்றி தீயை பற்ற வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
தீப்பற்றி எரிவதை கண்ட ராணியின் மகன் மோகன் ஓடி வந்து அக்கம் பக்கத்தினரை அழைத்து தீயை அணைத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ரஞ்சிதத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். 70 வயதான ரஞ்சிதம் 80 சதவீதம் தீக்காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏரியூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி இரண்டாவது மனைவி ராணி என்ற ரம்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.