ரயில் கழிப்பறையில் ரகசிய கேமரா : கல்லூரி மாணவியிடம் சிக்கிய டி.டி.ஆர்!

18 September 2020, 2:41 pm
Arakkonam Junction- updatenews360
Quick Share

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி கோவையில் உள்ள தனியார் பெறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார். தற்போது கல்லூரி விடுமுறை என்பதால், சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கோவைக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டதால், தான் பயின்ற கல்லூரி விடுதியில் உள்ள பொருட்களை வீட்டிற்கு எடுத்து வர திட்டம் போட்ட மாணவி, தனது தம்பியுடன் சென்னையில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் சென்றார்.

பின்னர் பொருட்களை எடுத்து விட்டு மீண்டும் சென்னைக்கு வர சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டார். ரயில் அரக்கோணம் வந்தடைந்து போது, மாணவி கழிப்பறைக்கு சென்றார். அப்போது ரயில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த மேகநாதன் என்ற டிடிஆர் கழிப்பறையில் உள்ள ஜின்னல் பகுதி வழியாக செல்போன் வைத்து மாணவியை படம் பிடிக்க ஆரம்பித்தார்.

இதைப்பார்த்த மாணவி, உடனே கூச்சலிட்டு, சக பயணிகளை வர சொல்லி, டிடிஆரிடம் கடும் வாக்குவாதம் செய்தார். மேலும் சக பயணிகள் உதவியுடன் டிடிஆரிடம் இருந்து செல்போனை பறித்து பார்த்த போது, மாணவியின் சில படங்கள் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாணவி பெரம்பூர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி விசாரணை நடத்தி, டிடிஆர் மேகநாதன் (வயது 26) கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர். ரயிலில் இளம்பெண்ணுக்கு நடந்த சம்பவம் சக பயணிகளிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0