தண்டவாளத்தை கடக்க முயன்று தவறி விழுந்த முதியவர்: விரைந்து மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர்..!!

Author: Aarthi Sivakumar
17 August 2021, 6:07 pm
Quick Share

வேலூர்: ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்று தவறி விழுந்த முதியவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று மீட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில் நிலையத்தில் இன்று காலை வடமாநில முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கூட்ஸ் வண்டியை கவனக்குறைவாக கடக்கும் போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அப்போது அந்த பெரியவர் கூட்ஸ் வண்டிக்கு கீழே நுழைந்து சென்று விடலாம் என்று நினைத்த நேரத்தில் வண்டி புறப்பட்டுவிட்டது. இதையடுத்து பணியில் இருந்த காட்பாடி ரயில்வே போலீஸ் வினோத் மற்றும் தலைமை காவலர் சண்முகம் ஆகிய இருவரும் கீழே விழுந்த பெரியவரை ஓடிச்சென்று காப்பாற்றினர்.

இச்சம்பவம் காட்பாடி இரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்காட்சிகள் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிறப்பான பணி செய்த காட்பாடி ரயில்வே போலீசாருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். இக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 610

0

0