கலாமின் கனவை நனவாக்கும் பாதுகாப்பு படை வீரர்கள் : சிறுவர் பூங்காவை சுத்தப்படுத்தி மரக்கன்று நட்டு அசத்தல்!!

Author: Udayachandran
27 July 2021, 2:44 pm
Tree Planting -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு குமரி ஜவான்ஸ் அமைப்பை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் சேதமடைந்து காணப்பட்ட சிறுவர் பூங்காவை சுத்தப்படுத்தி மரக்கன்றுகள் நட்டனர்.

தமிழகத்தில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் மூலம் 1998 ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி பெரியார் நினைவு சமத்துவபுரம் என்ற பெயரில் காலனி வீடுகள் கட்டி கொடுத்தார்.

இத போன்ற வீடுகள் குமரி மாவட்டத்திலும் ஏழுதேசம் பேரூராட்சிக்கு உட்பட்ட கலிங்கராஜபுரம் பகுதியில் சமத்துவபுரம் என்ற பெயரில் கட்டி கொடுக்கபட்டது. இந்த வீடுகள் அமைந்திருக்கும் பகுதியில் அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் சிறுவர் பூங்காக்கள், பால் விற்பனை மையங்கள், நியாயவிலை கடைகள் போன்றவையும் அமைக்கபட்டு இருந்தது.

இதனை ஏழுதேசம் பேரூராட்சி ஊழியர்கள் முறையாக பராமரித்து வந்த நிலையில் நாளடைவில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் விட்டுவிடப்பட்டதால் சிறுவர் பூங்கா அமைந்திருந்த பகுதி குப்பைகள் நிறைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காணப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் 6-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் கண்ட பசுமை இந்தியா என்ற கனவை நினைவாக்கும் பொருட்டு கன்னியாகுமரி ஜவான்ஸ் என்ற அமைப்பை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் சமத்துவபுரம் பூங்கா பகுதியை ஜேசிபி இயந்திரம் மூலம் சீரமைத்து குப்பைகளை குழிதோண்டி புதைத்து அந்த பகுதியில் 150க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பசுமையை மேம்படுத்தினார்.

Views: - 291

0

0