ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தொடரும்: உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

30 November 2020, 5:28 pm
highcourt - updatenews360
Quick Share

சென்னை: கிரானைட் முறைகேடு விசாரணையில் பங்கேற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை கிரானைட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது சென்னை உயர்நீதிமன்றம் சகாயம் ஐஏஎஸ் தலைமையில் ஒரு குழு அமைத்து விசாணைக்கு உத்தரவிட்டது. இந்தக்குழு கடந்த 2018ல் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.

sahayam - updatenews360

தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சுமார் ஒரு லட்சம் கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், சகாயம் விசாரணைக் குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டார். கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பை தொடர வேண்டும்.

கிரானைட் முறைகேடு விசாரணையில் பங்கேற்ற தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். அவர்களுக்கு பாதுகாப்பு இருந்தால்தான் அச்சமில்லாமல் கலந்து கொள்ள முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Views: - 34

0

0