சாலையில் நாற்று நட்டிய பொதுமக்கள் : மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நூதன போராட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan7 November 2021, 8:17 pm
கோவை : கோவை ரத்தினபுரி அடுத்த சங்கனூர், நல்லாம்பாளையம் பகுதியில், பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் குண்டும் குழியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால், அனைத்து பேருந்துகளும் ரத்தினபுரி, சங்கனூர் முதல் நல்லாம்பாளையம் பிரதான சாலை வழியாக சென்று வருகின்றது.
மேலும் இந்த பகுதியில், கடந்த சில நாட்களாக பெய்து வருவதால் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழிகள் உருவாகி அந்த குழிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், இவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் விபத்தில் சிக்குகின்றனர்.
தொடர்கதையாக நடைபெற்று வரும் இந்த சாலை விபத்துகளை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் மாநகராட்சி நிர்வாகம் செவிசாய்க்காததால் தேங்கிய மழைநீரில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு குண்டும் குழியுமான சாலையில் நாற்றுக்களை நட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
0
0