ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் பாஜகவில் இணைந்தால் புனிதர்களா..? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
கரூரில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். முன்னதாக, கரூரில் உள்ள தனியார் விடுதியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது :- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளேன். அவர் எனது தம்பி. அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அவர் மீது வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு கடந்த ஜெயலலிதா அம்மையார் ஆட்சி காலத்தில் நடந்தது. இதுவரை இந்த வழக்கை விசாரிக்காதது ஏன்? எதற்காக இவ்வளவு நாள் காலதாமதம் செய்தீர்கள். ? நேர்மையாக உள்ளவர்களாக இருந்திருந்தால், அப்போதே அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அதிமுக அமைச்சர்கள் 6 பேர் மீது வழக்கு உள்ளது. இதுவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? தற்போது அமலாக்கத்துறை என்பது அமலாக்கத்துறை அல்ல, அமல், மாமூல் துறையாக உள்ளது.
கொடநாடு முதல்வர் ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாக செயல்பட்டது. தனி வழித்தடத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கக் கூடிய பகுதியாகும். அந்த இடத்தில் எப்படி மின்சாரம் தடைபட்டது.? எப்படி கொலை நடந்தது? அவரது கார் ஓட்டுநரின் சகோதரர் கொடுத்த பேட்டி காலதாமதம் என்றாலும் அது வரவேற்கத்தக்கது.
இவரை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் இவருக்கு கொலை மிரட்டல் விட்டதாக அவர் தெரிவித்து இருக்கிறார். துணிந்து அவர் சொல்வதை வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் 14 பேர்களை சுட்டுக்கொலை செய்த சம்பவம் போல கோடநாடு கொலை சம்பவம் ஆகிவிடக்கூடாது.
திமுக, மத்திய அரசுடன் கடந்த 18 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்தது, அப்போது ஏன் நீட் தேர்வு மற்றும் கட்சத் தீவு தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது ஏன்..? என்எல்சி நிறுவனத்தில் ஒரு தமிழர் கூட பணியில் இல்லை. இவர்கள் தமிழ்நாட்டில் இடம் வாங்கிக் கொண்டு விரிவாக்கம் செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்களுக்கு ஏன் நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
காவிரி பிரச்சனையில் தேசியக் கட்சிகளான பிஜேபியும், காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் மாநில கட்சிகளாக நடந்து கொள்கிறது.
மாநில அரசு போல் செயல்பட்டு வரும் தேசிய கட்சிகளுக்கு ஏன் தேர்தல் பிரச்சாரம் செய்து அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டும்.?
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் பாஜகவில் சேர்ந்து விட்டால், அவர்கள் புனிதராகிய விடுவார்களா? அது என்ன புனித கட்சியா?.
தமிழகத்தில் உள்ள திமுக – அதிமுக இரண்டு கட்சிகளும் பாஜக மற்றும் காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என கூறி அவர்களை வெளியேற்றட்டும், அப்படி வெளியேற்றிவிட்டால் அவர்களுக்கு எம்பி தேர்தலில் நாம் தமிழர் கட்சி பிரச்சாரம் செய்யும், எனது தம்பிகளை சமாதானப்படுத்திக் கொள்கிறேன். அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
அமைச்சர் பொன்முடி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மண் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கை இன்று விசாரிப்பதாக கூறுகின்றனர். ஆனால், சேகர் ரெட்டி மணல் எடுத்த வழக்கு ஏன் இதுவரை விசாரிக்கவில்லை? அந்த வழக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்பினார்.
நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து சீமான் மீது புகார் அளித்து வருவது குறித்து கேட்ட கேள்விக்கு, பதில் அளித்த அவர், ‘தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து தான் வருகிறார், வைக்கட்டும் பார்க்கலாம்,’ என்றார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.