தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “கலைஞர் கருணாநிதி பற்றி அவதூறான கருத்துக்களை சீமான் தெரிவித்து வருகிறார். கலைஞர் பற்றி தமிழ் மக்கள் அறிவர். கலைஞர், தமிழ்நாடு மக்களுக்காக தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் பணியாற்றியவர். தமிழ் மொழியை செம்மொழி ஆக்கியவர்.
மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறானிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர். இளைஞர்களுக்காக கல்விக்கடன் ரத்து, கணினி வழங்கும் திட்டம், முதல் பட்டதாரி திட்டம் உட்பட பல திட்டங்களை தந்தவர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் கலைஞர். அவரை அவதூறாக பேசுவது கண்டிக்கத்தக்கது.
நாம் தமிழர் கட்சியினர் கலைஞரை அவதூறாக பேசுவதை கண்டிக்காமல் சீமான் சிரித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு தலைவருக்குரிய பண்பு இல்லை. கலைஞரின் மறைவின் போது அவரை புகழ்ந்து பேசியவர் தற்போது மாற்றி பேசுகிறார்.
தமிழக முதல்வர், கழகத் தலைவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு எங்கள் கட்சியினர் பொறுமையாக உள்ளனர். அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுக்கள் கூறும்போது நாங்கள் எந்த புகாரும் அளிக்கவில்லை.
தற்போது சாதி ரீதியாக பேசியதாக துரை முருகன் மீது அருண் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீமான் கொள்கை இல்லாதவர். வாய்க்கு வந்ததை பேசுகிறார். சட்டம் ஒழுங்கில் பிர்சசனை ஏற்படுத்த முயன்று வருகிறார். ஏற்கனவே கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களை சாத்தான்களின் பிள்ளைகள் என்று கூறியவர். ஈரோட்டில் தூய்மைப் பணியாளர்களை சாதிரீ ரியாக இழிவு படுத்தி அவதூறாக பேசியவர்.
அரை வேக்காட்டுத் தனமாக தினமும் ஒரு கருத்துக்களை தெரிவிக்கிறார். அவரது மனநிலையை சோதிக்க வேண்டும். சவுக்கு சங்கர், பெலிக்ஸ் கைது குறித்து கேள்வி கேட்கிறார்.
பெண் காவலர்கள் புகார் மீது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. பெண் காவலர்களை அவதூறாக பேசியதை அவர் ஆதரிக்கிறாரா? கருத்துரிமை பறிக்கப்படுவதாக பேசுகிறார்.
தனிப்பட்ட முறையில் தவறாக பேசுவதை ஏற்க முடியாது. அவர் தவறான தகவல்களை தெரிவித்து தமிழ் சமூகத்தை தவறாக வழிநடத்துகிறார்.
இலங்கை தமிழர் பிரச்சனையை முன்நிறுத்தி உலக அளவில் அவர் நிதி பெற்று வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ராஜபக்சேவை போல திமுகவையும், அதன் தலைவர்களையும் தமிழர்களின் விரோதியாக சித்தரித்து அவதூறாக பேசி வருகிறார். சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும் என்றார்.
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
This website uses cookies.