‘புதிய கல்வி கொள்கைக்கு எதிரான போராட்டம்’ – சீமான் மீது வழக்குப்பதிவு..!
17 August 2020, 12:55 pmமுழு ஊரடங்கின்போது ஆட்களை கூட்டி போராட்டம் நடத்தியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கை 2020-க்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்னையில் போராட்டம் மேற்கொண்டார்.
இந்த போராட்டத்தில் அவரின் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது, இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வி என்று ஒற்றைமயப்படுத்துவது தேசிய இனங்களுக்கு எதிரானது என குற்றம் சாட்டினார். மேலும், இந்தியா ஒரே தேசம் அல்ல எனவும் பல நாடுகளின் ஒன்றியம் எனவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
இந்த சூழலில், கொரோனா பரவலை தடுக்க சென்னை முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டம் கூட்டி போராட்டம் நடத்தியது சட்டத்திற்கு முரனானது எனக்கூறி சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோர் மீதும்
சென்னை மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.