சிங்கப்பூரில் விமானத்தில் தங்கம் கடத்தல்: திருச்சி விமானநிலையத்தில் இருவர் கைது..!!

8 March 2021, 8:48 am
trichy gold1 - updatenews360
Quick Share

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.74 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருச்சிக்கு சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 150க்கு மேற்பட பயணிகளுடன் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இரு பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை தனியே அழைத்து சென்று உடமைகளை சோதனை மேற்கொண்டனர்.‘

அப்போது தஞ்சை மாவட்டம், புனவாசல் பகுதியை சேர்ந்த மணிமாறன் என்ற பயணி தனது உடமையில் ரூபாய் 36 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான 798 கிராம் தங்கத்தையும், அதே போல் தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டை சேர்ந்த செந்தில் என்ற பயணி உடமையில் மறைத்த எடுத்து வந்த ரூபாய் 36 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான 798 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 73.48 லட்சம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்து அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 29

0

0