ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 26 லட்சம் ரூபாய் பறிமுதல்: வருமானவரித் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை

Author: Udhayakumar Raman
25 September 2021, 8:37 pm
Quick Share

வேலூர்: காட்பாடி அருகே ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 26 லட்சம் ரூபாய் ரொக்கத்தை வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டை சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் ரூபாய் 26 லட்சத்து 22 ஆயிரத்து 200 ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதற்கான ஆவணங்களை கேட்டபோது ஆவணங்களை கொடுக்காததால் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜோதி என்பதும்,

இவர் அப்பகுதியில் மணல் குவாரி தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. பின்னர் தேர்தல் பறக்கும் படையினர் தேர்தல் நடக்கும் ஆர்வலரான செந்தில்வேலன் இடம் பணத்தை ஒப்படைத்தனர். பின்பு இந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை காண்பித்து பின்பு பணம் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும். இந்த பணம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் வருமான வரித்துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விரைவில் அவர்கள் இந்த பணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய உள்ளனர்.

Views: - 354

0

0