காரில் கள்ள நோட்டுகள் கடத்திய தந்தை மற்றும் மகன் கைது

14 September 2020, 9:33 pm
Quick Share

நீலகிரி: மஞ்சூரில் காரில் கள்ளநோட்டுகள் கடத்திய தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 12,500 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தோகமடைந்த போலீசார் தீவிர விசாரணையை படுத்தியதில், காரில் இருந்த சுப்பிரமணி மற்றும் மகேந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் இருவரும் தந்தை, மகன் என தெரிய வந்ததையடுத்து காரையும் பறிமுதல் செய்து போலீசார் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Views: - 6

0

0