கொடைக்கானலில் குட்கா பொருட்கள் பறிமுதல்… உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி நடவடிக்கை

Author: kavin kumar
20 January 2022, 8:14 pm
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் 30 ஆயிரம் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா பகுதிகளில் குட்கா புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு புகார் வந்தது. இந்த புகாரை அடுத்து கொடைக்கானல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லாரன்ஸ் மற்றும் அலுவலர்கள் அப்சர்வேட்டரி சாலை, நாயுடுபுரம், மூஞ்சிக்கல், உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தனர். இதில் அப்சர்வேட்டரி சாலையில் கலையரங்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 30 ஆயிரம் ஆகும்.

Views: - 247

0

1