கோவையில் செம்மண் கடத்தி வந்த லாரி பறிமுதல்..

3 March 2021, 11:32 am
Quick Share

கோவை: தடாகம் பகுதியில் இருந்து முறையான அனுமதி பெறாமல் செம்மண் கடத்தி வந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் செம்மண் கடத்தல் நடைபெறுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் கனிம வளத்துறை தனி வருவாய் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் தண்ணீர் பந்தல் பகுதியில் நேற்று மாலை வாகன தணிக்கை நடத்தப்பட்டது.

அப்போது ஈச்சர் லாரி (TN38CS3498) ஒன்று செம்மண் ஏற்றி வந்துள்ளது. அதிகாரிகள் சோதனை கொண்டிருந்ததை கண்ட அந்த லாரியின் ஓட்டுநர் லாரியை திருப்ப முயன்றபோது அதனை மடக்கிப் பிடித்த அதிகாரிகள் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் ஓட்டுநர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட பொழுது முறையான அனுமதி பெறாமல் செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஆய்வாளர் ரமேஷ் தடாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் லாரி ஓட்டுநர் சிவகுமாரை கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Views: - 1

0

0