வேனில் கடத்திச் சென்ற 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல் : 2 பேர் தப்பி ஓட்டம்…

Author: kavin kumar
4 January 2022, 4:27 pm
Quick Share

திருவள்ளூர்: திருத்தணி அருகே சட்டவிரோதமாக வேனில் கடத்திச் சென்ற 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலத்திலிருந்து திருத்தணி வழியாக செம்மரங்கள் கடத்துவது தொடர்கதையாக இருக்கிறது. இதனால் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அறிவுறுத்தலின் பேரில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பத்தில் மாவட்ட சிறப்பு காவல் பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த வேனை மடக்கிய போது நிற்காமல் சென்றது.

இதனால் சிறப்பு காவல் படை பிரிவினர் வேனை விரட்டி சென்றனர். இதனால் வேனில் வந்தவர்கள் சாலையோர பள்ளத்தில் வேனை நிறுத்திவிட்டு அங்கிருந்து 2பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து வேனை சோதனை செய்த போது அதில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற செம்மரங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து வேனில் இருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான 2 டன் செம்மரங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கனகம்மா சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 221

0

0