தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை.. சிக்கிய பெட்டிக்கடை உரிமையாளர் : 65 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2022, 10:36 am
Hans Seized - Updatenews360
Quick Share

கோவை நீலம்பூரில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 65 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை , உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

கோவை நீலாம்பூரில் பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் சூலூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வ பாண்டியன் சிங்காநல்லூர் பகுதி அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சோதனை நடத்தினர்.

அதில் அண்ணா நகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை கண்டுபிடிக்கப்பட்டது. கடை உரிமையாளர் உதய குமாரிடம் விசாரித்தனர்.

இதையடுத்து அவரது வீட்டை ஆய்வு செய்த அதிகாரிகள் 65 கிலோ எடையுள்ள ஒரு லட்சத்தி 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பல வகையான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் சில பாக் கெட்டுகளை ஆய்வுக்கு எடுத்த அதிகாரிகள் , உதயகுமாரை சூலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர் .

மாதிரி பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட நபர் மீது , உணவு பாதுகாப்புத்துறை சார்பில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

Views: - 734

0

0