என்னடா சொல்றீங்க.. 200 மி.லி தாய்ப்பால் 700 ரூபாய்.. மெடிக்கல் ஷாப்பிற்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்..!

Author: Vignesh
31 மே 2024, 3:52 மணி
milk
Quick Share

சட்ட விரோதமாக தாய்ப்பாலை பாட்டிலில் வைத்து விற்ற கடையை சோதனை செய்த அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

சென்னை மாதவரத்தில் சட்ட விரோதமாக பாட்டில்களில் அடைந்து தாய்ப்பால் விற்றதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில், மாதவரம் கே.கே.ஆர் கார்டன் முதலாவது தெருவில் லைஃப் வேக்ஸின் ஸ்டோர் என்ற மருந்து விற்பனை கடை உள்ளது. இதனை கேகேஆர் கார்டன் பகுதியை சேர்ந்த செம்பியன் முத்தையா (வயது 40) என்பவர் நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது… புதிய அறிவிப்பால் மகிழ்ச்சியில் மாணவர்கள்..!

இங்கு தாய்ப்பால் பாட்டில்களில் அடைத்து விற்பதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் வந்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் போஸ், கஸ்தூரி ஆகியோர்கள் சோதனை செய்தபோது குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 200க்கு மேற்பட்ட பாட்டில்களில் தாய்ப்பால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 200 மிலி கொண்ட இந்த தாய்ப்பால் பாட்டில் விலை சுமார் 700 ரூபாய்க்கு மேலாக விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த தாய்ப்பால் யாரிடமிருந்து பெறப்பட்டது எங்கிருந்து யார் மூலமாக வந்தது என்பது போன்ற விசாரணையில்,
மருத்துவத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதன் பின்னர் முழுமையான தகவல் கிடைக்கும் என தெரிகிறது. சட்டவிரோதமாக மாதவரம் பகுதியில் தாய்ப்பால் விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Tamilisai Thirumavalavan தரம் தாழ்ந்த விமர்சனமா? தப்பாக இருந்தால் வருந்துகிறேன்.. திருமாவளவன் திடீர் பல்டி!
  • Views: - 282

    0

    0