பொதுத்துறைகளை விற்பது தேச நலனுக்கு எதிரானது : சட்டப்பேரவையில் முதலமைச்சர் கவன ஈர்ப்பு தீர்மானம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2021, 11:23 am
CM Stalin- Updatenews360
Quick Share

சென்னை : பொதுத்துறை நிறுவன சொத்துக்களை தனியார்மயமாக்குவதை கைவிடக்கோரி மத்திய அரசுக்கு எழுத்தவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவன சொத்துக்களை இந்திய அரசு தனியாருக்கு விற்பது தொடர்பாக, சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை , கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது கருத்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டு மக்களின் சொத்து. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது. பொருளாதார நலனுக்கும், சிறு,குறு தொழிலுக்கும் ஆணிவேராக பொதுத்துறை நிறுவனங்கள் இருப்பதாகவும், பொதுத்துறை நிறுவன சொத்துக்களை தனியார்மயமாக்குவதை கைவிடக்கோரி மத்திய அரசுக்கு எழுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Views: - 313

0

0