அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் யாரை காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது என ஆதாரங்களுடன் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் டிசம்பர் 25ஆம் தேதி இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்தனர். இவர் திமுக நிர்வாகி என்பது பிறகு தெரியவந்தது.
ஜனவரி மாதம் இறுதியில் சில விஷயங்களை உங்களிடம் கூறியிருந்தேன், ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்ற விபரம் உள்ளது என சொல்லியிருந்தேன். அதை பற்றி தான் இந்த வீடியோவில் நான் விளக்கமளிக்க உள்ளேன்.
5 மாதம் கழித்து இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது. அதாவது முக்கிய குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 வருட தண்டனை கொடுத்தது வரவேற்கத்தக்கது.
ஆனால் அரசு முழு வேலையை இந்த வழக்கில் செய்ததா என கேள்வி எழுகிறது. டிசம்பர் 24ஆம் தேதி ஞானசேகரனை கைது செய்த காவல்துறை பின்பு விடுவித்தது, மறுநாள் மீண்டும் ஞானசேகரன் கைது செய்யப்படுகிறார். ஏன்?
கிராவிட்டி பிரியாணி கடையை நடத்தி வரும் ஞானசேகரன், டிசம்பர் 23ஆம் தேதி பாலியல் சம்பவம் நடந்த போது ஞானசேகரன் மொபைல் போன் FLIGHT MODEல் இருந்தது என அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். அவர் சொன்னது சரிதான்.
8.52க்கு பிறகு FLIGHT MODEல் இருந்து வெளியே வந்த போன், 8.55க்கு ஞானசேகரன் போனில் இருந்து ஒரு காவல் அதிகாரிக்கு முதல் போன் கால் போனது.ஏன்?
அந்த காவல்துறை அதிகாரி 9.01க்கு திரும்ப ஞானசேகரனுக்கு போன் செய்துள்ளார். குற்றம் செய்த பிறகு ஞானசேகரன் காவல்துறை அதிகாரிக்கு கூப்பிடுகிறார், திருப்பி காவல்துறை அதிகாரி ஞானசேகரனுக்கு கூப்பிடுகிறார்.
குற்றம் செய்த அடுத்த நாள் டிசம்பர் 24ஆம் தேதி, திமுகவின் கோட்டூர் சண்முகமும், ஞானசேகரனும் 5 முறை போனில் பேசியுள்ளனர்.
பின்னர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு 24ஆம் தேதி விடுதலை செய்யப்படுகிறார். அப்போது மீண்டும் கோட்டூர் சண்முகத்திடம் ஞானசேகரன் பேசியிருக்கிறார். எதற்கு கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும்? ஆதாரத்தை அழிக்கவா?
ஞானசேகரன் கோட்டூர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பின்பு, அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் கோட்டூர் சண்முகம் இருவரும் பேசுகிறார்கள். அண்ணா பல்கலையில் பணிபுரியம் நடராஜன் என்பவருடன் கோட்டூர் சண்முகம் 13 முறை பேசியுள்ளார்.
கோட்டூர் சண்முகம் 24ஆம் தேதி இரவு 8.59 மணிக்கு இன்னெரு காவல்துறை உயரதிகாரியிடம் பேசுகிறார். எதற்கு இத்தனை படபடப்பு, ஆதாரத்தை அழிக்கத்தான் இது நடந்துள்ளது. என்ன ஆதாரம் அழிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் மறுநாள் 25ஆம் தேதி காலையில் சொல்கிறார்கள், அண்ணா பல்கலை., சிசிடிவி வேலை செய்யவில்லை என்று.
கோட்டூர் சண்முகத்திடம் காவல்துறை ஏன் விசாரிக்கவில்லை, அமைச்சரிடம் ஏன் கேள்வி எழுப்பவில்லை? 24ஆம் தேதி இரண்டு காவல்துறை அதிகாரிகள் மாணவியிடம் FIR எல்லாம் வேண்டாம் மா, எதிர்காலம் வீணாகிவிடும் என சொன்னதாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
கோட்டூர் சண்முகம், அமைச்சரும் தினமும் பேசியிருக்காங்களா என கேட்டால், 24ஆம் தேதி மட்டும் இருமுறை பேசியுள்ளார்கள். அதன் பிறகு 6 நாட்கள் இருவரும் பேசவில்லை.
அண்ணா பல்கலை, மாணவி சகோதரனாக நான் சாட்டையில் அடித்து கொண்டேன். நிச்சயம் இந்த வழக்கை நான் சும்மா விடமாட்டேன், முதலமைச்சர் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். கேள்விகளை தொடர்ந்து கேட்போம், காவல்துறை கையை கட்டிப் போட்டது யார்? யாரெல்லாம் உடந்தை? இதில் ஒளிந்திருக்கும் யார் அந்த SIR என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என அண்ணாமலை அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.