மின்கட்டணம் செலுத்த இனி அவகாசம் இல்லை.. இன்றே கடைசி நாள் : அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

Author: Babu
15 June 2021, 2:44 pm
senthil balaji - updatenews360
Quick Share

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தும் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்றும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் நீட்டிப்பு தேவைப்படாது என்று கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ம் தவணையாக ரூ 2 ஆயிரம் ரொக்கம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கரூர் நகரில் படிக்கட்டுத்துறை பகுதியில் நடைபெற்றது. கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் அலிகான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு ரூ 2 ஆயிரம் ரொக்கம் மற்றும் 14 வகையான பொருட்கள் வழங்கும் பணியினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் துறை, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய செந்தில் பாலாஜி, “முதல்வர் சட்டமன்ற தேர்தலில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குடும்ப அட்டைக்கு 4000 தருவதாக அறிவித்திருந்தார். சுமார் 8300 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி 14 வகையாக மளிகை பொருட்களுல் கரூர் மாவட்டத்தில்ரூ 12 கோடி 60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்படுகிறது. சொல்லி இருக்கின்ற வாக்குறுதியை செயல்படுத்துவதில் முதல்வர் முனைப்புடன் செயல்படுதேதி வருகின்றார்,” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது :- தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கு ஏற்கனவே போதுமான அளவு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மேற்கொண்டு மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தேவை இருக்காது, என்றார்.

டாஸ்மாக் குறித்து பாமக ராமதாஸ் கூறியதை குறித்த கேட்டதற்கு, அதிமுக ஆட்சியின் கொரோனா காலத்தில் இருந்த போது அவர் அதிமுக கூட்டணியில் தான் இருந்தார். தற்போது தொற்று குறைந்த மாவட்டத்தில் மட்டும் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ள நிலையில் கருத்து சொல்கிறார், என்றார்.

Views: - 227

0

0