செப்.11 இனி மகாகவி நாள்.. மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுடன் விருது : முதலமைச்சர் அறிவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2021, 1:53 pm
Bharathiyar CM - Updatenews360
Quick Share

பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் தேதி இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப்போட்டி நடத்தி பாரதி இளம் கவிஞர் விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாரதியாரின் பாடல்கள், கட்டுரைகளை தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகம் வழங்கப்படும். மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவுநாளையொட்டி 14 முக்கிய அறிவுப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

மாநில அளவில் கவிதைப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர், மாணவிக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 117

0

0