கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் கொடுமையை தடுக்க தனி கமிட்டி : 7 பேர் கொண்ட குழு அமைப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2022, 12:22 pm
Cbe Govt Medical College -Updatenews360
Quick Share

கோவை : கோவை அரசு மருத்துவ கல்லுாரியில், ராகிங்கை தடுக்க தனி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவக்கல்லுாரியில் நடப்பு கல்வி ஆண்டில், 177 மாணவ மாணவிகள் சேர்ந்துள்ளனர். வகுப்புகள் நடந்து வரும் நிலையில், ‘ராகிங்’ என்ற பெயரில் ஜூனியர் மாணவர்களிடம் சீனியர் மாணவர்கள் அத்துமீறுவதை தடுக்கும் விதமாக,டீன் தலைமையில், பேராசிரியர்கள், போலீசார், வழக்கறிஞர், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் உள்ளிட்ட ஏழு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கல்லுாரி டீன் நிர்மலா கூறுகையில், ”இதுவரை ராகிங் புகார் வரவில்லை. ஜூனியர் மாணவர்களிடம் வரம்பு மீறும் சீனியர் மாணவர்களை, கல்லுாரியிலிருந்து நீக்கும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், ராகிங் தடுப்பு குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கமிட்டியில் உள்ள அதிகாரிகளின்.மொபைல் போன் எண்களும் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன,” என்றார்.

Views: - 713

0

0