நடிகை அளித்த புகார் : முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய தனிப்படை அமைப்பு

18 June 2021, 10:34 am
Quick Share

சென்னை : நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாந்தினி. இவரும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் நெருங்கி பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகை சாந்தினை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை காதலிப்பதாகக் கூறி 5 ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்து வந்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், கருவுற்ற தன்னை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததோடு, கூலிப்படையை வைத்து தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மணிகண்டன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், நடிகை கொடுத்த புகாரின் பேரில், தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தனிப்படையினர் மதுரை விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 186

0

0