செப்.,28 ஆம் தேதி விவசாயிகள் சார்பாக உண்ணாவிரத போராட்டம் : பி.ஆர். பாண்டியன் அறிவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2021, 6:22 pm
PR Pandian - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : த‌மிழ‌க‌ ச‌ட்ட‌பேர‌வையில் இன்று அறிவிக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ஞ்சு மீதான‌ 1 ச‌த‌வீத‌ நுழைவு வ‌ரி ர‌த்து செய்ய‌ப்ப‌ட்ட‌தை விவ‌சாயிக‌ள் சார்பாக‌ வ‌ர‌வேற்ப‌தாக‌ தமிழ்நாடு விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர் பாண்டிய‌ன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் விவசாயிகளுடன் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர் பாண்டியன் ஆலோசனையில் ஈடுபட்டார். விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக சட்டப்பேரவையில் இன்று பஞ்சு மீதான ஒரு சதவீத நுழைவு வரி ரத்து செய்யப்பட்டதை விவசாயிகள் சார்பில் வரவேற்பதாகவும் தெரிவித்தார் .

டி.கே.டி எனப்படும் பட்டாக்களை வைத்து பல வருடங்களாக விவசாயம் செய்து வரும் சுமார் 1000 விவசாயிகளின் பட்டாக்களை எந்தவித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாகவும், அதேபோல் கொடைக்கானல் மலைப் பகுதி முழுவதிலும் மறு அளவீடு செய்ய வேண்டுமெனவும் தொடர்ந்து கொடைக்கானலில் விளைவிக்கப்படும் பிளம்ஸ், வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட காய்கறிகளுக்கு குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

ம‌லைப‌குதியில் குடியிருக்கும் குடிமக்களை வருவாய்த்துறையினர் லஞ்சம் பெற்றுக் கொண்டு வேண்டப்பட்டவர்களுக்கு பட்டா மாறுதல் செய்து கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்த‌ அவ‌ர் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்கு வருவதை தடுக்கவும் வ‌ன‌வில‌ங்குக‌ளுக்கான‌ தேவையை வனத்துறை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மேலும் அனைத்து கோரிக்கைகளையும் வ‌லியுறுத்தி வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கூறினார்.

Views: - 216

0

0