செப்., முதல் பள்ளி மாணவர்கள் சீருடையுடன் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்கலாம் : அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
30 August 2021, 8:08 pm
bus pass - updatenews360
Quick Share

சென்னை : செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி மணவர்கள் சீரூடையுடன் பேருந்துகளில் பயணிக்கலாம் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் சுமார் 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்து வருகிறது. மாணவர்களின் நலன் கருதி, ஆன்லைன் வாயிலாகவும், கல்வி தொலைக்காட்சியின் மூலமாகவும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், செப்., 1ம் தேதி முதல் 9 வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி மணவர்கள் சீரூடையுடன் பேருந்துகளில் பயணிக்கலாம் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள்‌ புகைப்படத்துடன்‌ கூடிய அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்‌ என்றும், அரசுக்‌ கல்லூரி, அரசு ஐடிஐ, அரசு பாலிடெக்னிக்‌ கல்லூரி மாணவ, மாணவிகள்‌ கட்டணமின்றி பயணிக்கலாம்‌ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 192

0

0