எனக்கு சிம்பு இப்பவே வேணும்.. பாக்கனும்.. சிம்பு வீட்டின் முன்பு அடம்பிடிக்கும் சீரியல் நடிகை.. தர்ணா போராட்டத்தால் பரபரப்பு.!

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி. விஜய் டிவியில் ஒளிபரப்பான 7சி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், இதையடுத்து யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆனார். கடந்த சில மாதங்களாக நடிகை ஸ்ரீநிதி அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான வலிமை படம் வெளியான போது முதல் நாள் முதல் ஷோ பார்த்த ஸ்ரீநிதி, அப்படத்தை பார்க்க பொறுமை வேண்டும், ஆனால் எனக்கு அது இல்லை. படம் ரொம்ப கொடுமையா இருந்துச்சு என கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள், அவரை திட்டித்தீர்த்தனர். சிலர் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக ஸ்ரீநிதி கூறி இருந்தார்.

இந்த நிலையில், ஸ்ரீநிதி, அடுத்ததாக சிம்புவை டார்கெட் செய்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிம்பு குறித்து மீம் ஒன்றை பதிவிட்டிருந்த ஸ்ரீநிதி, ஒரு நாள் எல்லாருக்கும் திருமணம் ஆகிருக்கும், நானும் சிம்புவும் மட்டும் தான் சிங்கிளா இருப்போம் என அதில் குறிப்பிட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர் நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்களாமே என ஐடியா கொடுக்க, இதுவும் நல்லா தான் இருக்கு என பதிலளித்திருந்தார் ஸ்ரீநிதி.

இந்நிலையில், நடிகை ஸ்ரீநிதி தன்னை திருமணம் செய்துகொள்ளக் கோரி நடிகர் சிம்பு வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதில் ஸ்ரீநிதி கூறி இருப்பதாவது : எனக்காக இத்தனை ஆண்டுகள் சிங்கிளாக இருந்திருக்கிறார் என்பதை என்னால நம்பவே முடியல. இன்னைக்கு தான் புரிஞ்சது சிம்பு, எல்லாரும் எங்கள சேர்த்து வைங்க ப்ளீஸ்! லேட்டா தான் புரிஞ்சது ஆனா புரிஞ்சிடுச்சு. சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் போராட்டமா? லவ்வுக்குலாம் போராட்டம் இல்லையா? என அதில் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் போனில் 4 சதவீதம் தான் சார்ஜ் உள்ளது. ப்ளீஸ் வாங்க. பர்ஸ்ட்டு சிம்பு வேணும், நெக்ஸ்ட் தண்ணி வேணும். கோவமா இருக்காரு அவர மட்டும் புரிஞ்சிக்கனுமா? நம்மள புரிஞ்சிக்கமாட்டாரா? ப்ளீஸ் வாங்க. வந்து சேர்த்து வைங்க, கத்துரதுக்கு எனர்ஜி இல்ல. எனக்கு அவ்ளோ ஒர்த்துனு இவ்ளோ வருஷமா எனக்கே தெரியல, புரிய வச்சிட்டாரு! வேணும், பாக்கனும், இப்பவே” என குறிப்பிட்டுள்ளார். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் அவர் நிஜமாகவே சிம்புவை லவ் பண்றாரா இல்ல பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறாரா என்பது தெரியாமல் குழம்பிப்போய் உள்ளனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.