பணம் கொடுக்கல் வாங்கலில் தொடர் தகராறு : செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்!

16 November 2020, 6:12 pm
Suicide Threaten- Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பெரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள சதுமுகை கிராமத்தில் வசிக்கும் தச்சு தொழிலாளி சரவணன். இவருக்கும் வீட்டின் அருகே வசிக்கும் சுரேஷ் என்பவருடன் நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்த நிலையில் இன்று காலை சதுமுகை அருகே சுமார் 7 மணி அளவில் சுமார் 300 அடி உயரமுள்ள ஏர்டெல் டவரின் மேல் ஏறி அமர்ந்துகொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

தகவலறிந்த ஊர் பொதுமக்கள் சத்தியமங்கலம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் தச்சு தொழிலாளி சரவணனிடம் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

இதில் சரவணன் கூறும்போது தனது வீட்டின் அருகே உள்ள சுரேஷ் என்பவர் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாகவும் தனக்கு நீண்டநாட்களாக தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் தனது உயிருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி சத்தியமங்கலத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறினார்.

இதனால் மனமுடைந்த சரவணன் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு சமாதான பேச்சுவார்த்தை இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சுமார் 10 மணி அளவில் இறங்கி வருவதாக சரவணன் தெரிவித்த காரணத்தினால், தீயணைப்பு துறையினர் 300 அடி உயரத்தில் உள்ள டவரில் ஏறி சரவணனை கயிறு கட்டி கீழே இறக்கி அழைத்து வந்தனர்.

கீழே வந்தவுடன் அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது. செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் சதுமுகை கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 17

0

0