பொருட்களை வழங்கி விட்டதாக தொடர் கொள்ளை : ரேஷன் கடை பணியாளர் ‘திருட்டு‘ அம்பலம்!!

16 November 2020, 6:56 pm
Ration Fraud - Updatenews360
Quick Share

திருப்பத்தூர் : ரேஷன் பொருட்களை உரிய நபர்களுக்கு வழங்கி விட்டதாக கூறி தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ரேஷன் கடை பணியாளர் மீது பாதிப்பட்டவர் புகார் கூறியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய ரேஷன் கார்டு ஆறு மாதத்திற்கு முன்பு தொலைந்து போனது. அவருடைய தொலைபேசி எண்ணும் நீண்டநாட்களாக உபயோகிக்காமல் இருந்த காரணத்தினாலும் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் ரேஷன் அட்டையை மீண்டும் பெறமுடியாமல் கிரிசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரேஷன் கடையில் பணியாற்றும் ரவி அவர்களிடம் உதவி கேட்டுள்ளார்.

அவரும் உதவுவதாக கூறி அவருடைய ஆதார் எண்ணை பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்துள்ளார்.தொடர்ந்து அவரிடம் ரேஷன் கார்டு பற்றி கேட்டும் எந்த பயனும் இல்லை.
நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று சந்திரசேகர் அவருடைய தொலைபேசி எண்ணிற்கு ரேஷன் பொருட்கள் வாங்கியதற்கான குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடை பணியாளர் ரவி அவர்களிடம் கேள்வி எழுப்பியதற்கு தவறுதலாக நடந்து விட்டது 20கிலோ அரிசி தானே பொருட்களை வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சாதாரணமாக கூறுகிறார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சந்திரசேகர் அவர்கள் கூறுகையில் தொடர்ந்து ஆறு மாத காலமாக நான் ரேஷன் பொருட்களை வாங்கவே இல்லை எனக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது ரேஷன் கடை பணியாளர் மட்டுமன்றி மற்ற அலுவலர்களும் இதில் சம்பந்தப்பட்ட இருக்க வாய்ப்பு இருக்கும் என்று கருதுகிறேன்.

இந்த பாதிப்பு எனக்கு மட்டுமன்றி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ என்று சந்தேகிக்கிறேன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை பணி நீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

Views: - 44

0

0