இப்படி உதவி செய்ய நல்ல மனசு வேணும் : கொரோனா காலத்தில் நலிவடைந்த 120 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பாஷ் மற்றும் ஏகம் அறக்கட்டளை!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2022, 11:08 am
Bosch Help -Updatenews360
Quick Share

கோவை : கோவையில் கொரோனா காலத்தில் நலிவடைந்த 120 குடும்பங்களுக்கு பாஷ் (BOSCH) நிறுவனம் மற்றும் ஏகம் அறக்கட்டளையின் சார்பில் தொழில் பயிற்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களில் சிலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து அவதியுற்றனர்.

இந்த நிலையில், பாஷ் நிறுவனம் மற்றும் ஏகம் அறக்கட்டளை இணைந்து வேலைவாய்ப்பிழந்த மற்றும் வேலையில் சரிவடைந்த சிறு தொழில் மற்றும் நலிவடைந்த 100 குடும்பங்களை கண்டறிந்து தொழிற்பயிற்சி அளித்தனர்.

மேலும், புதிய சிறு தொழில் தொடங்குவதிற்கான உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் வழங்கினர். மேலும் அவர்களின் தொழில் முன்னேற்றம் அடைவதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் தேவையான உதவிகள் வழங்கி வருகின்றனர்.

இதேபோல், முதற்கட்டமாக 20 குடும்பங்களுக்கு பாஷ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் மூலமாக சலூன் கடை, இஸ்திரி கடை, பெட்டிக்கடை அமைத்துக் கொடுத்து தையல் இயந்திரங்களை வழங்கினர்.

இந்த நலத்திட்டங்கள் மூலம் நலிவடைந்த குடும்பத்தினருக்கு நிலையான வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று ஏகம் அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.

Views: - 980

1

0