சென்னையில் தீவிரம் காட்டும் தொற்று… 1600ஐ நெருங்கும் பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!
Author: Udayachandran RadhaKrishnan2 January 2022, 7:48 pm
தமிழகத்தில் மேலும் 1594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,51,128 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 1594 பேருக்கு தொற்றுப் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,51,128ஆக அதிகரித்துள்ளது. தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 624 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதையடுத்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 27,51,128 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 9,304 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,790 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் 776 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 146 பேரும், கோவையில் 80 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
0
0