திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதியில் பாலியல் தொழில்? உயர்நீதிமன்றத்தில் மனு!!

7 November 2020, 5:36 pm
Thiruthani Temple - Updatenews360
Quick Share

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் பாலியல் தொழில், மது அருந்துவது, அசைவம் உண்பது போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் இந்த சட்டவிரோத செயலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்தணியை சேர்ந்த ஹர்ஷவர்தன் தவ்லூர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Policy decisions keep changing as per whims of party in power: Madras High  Court - The Hindu

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா ஊரடங்கு காலத்தில் கோவில் ஊரியர்கள் பெரியாகார்த்தி, குப்பன் அகியோர் கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகளை சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கோவில் இணை ஆணையர், மற்றும் அறங்காவலர்கள் ஆதரவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Facts and History of Thiruthani Murugan Temple – Hindu Temple Blog

இதனால் கோவிலுக்கு களங்கம் விளைவிக்கும் இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் ஹர்ஷவர்தன் தவ்லூர் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Views: - 23

0

0