சின்ன காஞ்சிபுரம் இராஜாஜி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் 14 வயதுடைய சிறுமி. இவர் காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய அம்மா இறந்த நிலையில் அக்கா மற்றும் அப்பாவுடன் வசித்து வருகிறார்.
சிறுமியின் தந்தை ரயில்வே சாலையில் உள்ள சிஎஸ்ஐ சர்ச்சில் தோட்ட வேலை செய்து வந்த போது ஒரு வாரம் காலம் சிஎஸ்ஐ சர்ச்சில் சிறுமி தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது சிஎஸ்ஐ சர்ச்சில் பாதிரியாராக இருந்து வரும் தேவஇரக்கம் என்பவர் கடந்த ஓருநாள் இரவு சிறுமி படுத்திருந்த நிலையில் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அப்போது சிறுமி கத்தியபடி வீட்டிற்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
இதனால் அந்த சிறுமியின் அக்கம் பக்கத்து வீட்டினருக்கு இந்த சிறுமியை பாதிரியார் பாலியியல் துன்புறுத்தியது கசிந்திருக்கிறது.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தகவல் அறிந்து இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்திட அங்கிருந்து காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியாவிற்கு இம்மனு வந்த நிலையில் இதுகுறித்து விசாரித்து உண்மை நிலையை அறிந்து காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் பாதிரியார் தேவஇரக்கம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியாரின் செயல் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.