4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : 56 வயது காமூகன் போக்சோவில் கைது..!

Author: kavin kumar
28 February 2022, 4:08 pm
Quick Share

கள்ளக்குறிச்சி : மணலூர்பேட்டை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே உள்ள ஆதிதிருவரங்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிலிங்கம் (56). இவர் நேற்று இவருக்கு சொந்தமான பெட்டி கடையில் அதே பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல கடையின் முன்பு நின்று கொண்டிந்தபோது, ஜோதிலிங்கம் 3 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமறைவாக இருந்த ஜோதிலிங்கத்தை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 623

0

0