வீட்டிற்கு வெளியே நின்றிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை : மாற்றுத்திறனாளி இளைஞருக்கு நையப்புடை!!

Author: Udayachandran
16 October 2020, 1:42 pm
Child harassed - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நாகர்கோவில் பகுதியில் வீட்டருகே நின்று கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மாற்றுத்திறனாளி இளைஞரை பொதுமக்கள் நையப்புடைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் 15 வயது சிறுமி தன் வீட்டை ஒட்டிய பகுதியில் நின்று துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஒரு இளைஞர், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இளைஞரிடம் இருந்து தப்பி வீட்டிற்குள் சென்று பெற்றோரிடம் தெரிவித்தார். இதற்கிடையே அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தபோது, அப்பகுதி மக்கள் திரண்டு இளைஞரை பிடித்து நையப்புடைத்து கோட்டார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், அந்த இளைஞர் தாழக்குடி பகுதியைச் சேர்ந்த 35 வயது குமார் என்பதும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தன் வீட்டு அருகே நின்று கொண்டிருந்த சிறுமியை அவ்வழியாக வந்த இளைஞர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்ததோடு, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 50

0

0