திருச்சி பிஷப் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : உடந்தையாக இருந்த பெண் பேராசிரியைக்கு வலுக்கும் சிக்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2021, 4:46 pm
Harrassment Enquiry 1 - Updatenews360
Quick Share

திருச்சி : கல்லூரி மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்து வந்த பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்த நிலையல் உடந்தையாக இருந்த பெண் பேராசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரி தமிழ்துறை தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது முதலாம் ஆண்டு முதுகலை மாணவிகள் சிலர், கல்லுாரி முதல்வரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

அதில் பாடம் நடத்தும்போது நெருக்கமாக அமர்ந்து கொள்வது, பாலியல் சீண்டல்கள், ஆபாசமாக இரட்டை அர்த்தத்துடன் பேசுவது, சில்மிஷம் செய்வது, அவரது அறைக்கு தனியாக வரச்சொல்லி வற்புறுத்துவது என்று தொடர்ந்து பாலியல் தொந்தரவுகளை துறை தலைவர் தந்து வருவதாகவும், அதற்கு பேராசிரியர் நளினி என்பவர் துணை போவதாகவும், இதன் காரணமாக தாங்கள் கல்லுாரிக்கு வருவதற்கு பெற்றோர்கள் அச்சம் தொிவிப்பதாகவும் அந்த கடிதத்தில் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனை தொடர்ந்து கல்லுாரி நிர்வாகம் வழக்கறிஞர் ஜெயந்தி ராணி தலைமையில், துணை முதல்வர் உள்ளிட்ட விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணை குழுவானது மாணவிகளிடமும், கல்லுாரி பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை நிர்வாகத்திடம் தாக்கல் செய்துள்ளது.

இதன் அடிப்படையில் தமிழ்துறை தலைவர் நேற்று பேராசிரியர் பால் சந்திரமோகன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை கூடுதல் துணை ஆணையர் வனிதா தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் முடிவில் வழக்கு பதிவு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதுவரை இந்தப் பாலியல் குற்றம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் புகழ் பெற்ற கல்லுாரி ஒன்றில் மாணவிகள் பாலியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளான சம்பவம் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 333

0

0