திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொல்லை… உல்லாசமாக இருந்த போட்டோவை இணையத்தில் பதிவிடுவதாக மிரட்டல் : நடிகை அமலா பாலின் நண்பர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2022, 1:10 pm
Amala Paul Friend Arrest - Updatenews360
Quick Share

திரைப்பட நடிகையான அமலாபாலுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திரைப்படத் தொழிலில் பஞ்சாப்பினை சேர்ந்த பவீந்தர் சிங் தத் என்பவருடன் நட்பு ஏற்பட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து (6T) பூவி திரைப்பட நிறுவனத்தினை கோட்டக்குப்பம் அருகில் உள்ள பெரியமுதலியார்சாவடியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி தொழில் செய்து வந்துள்ளனர்.

அப்போது அமலாபாலை திருமணம் செய்து கொள்வதாக பவீந்தர் சிங் தத் கூறி பலமுறை அமலாபாலுடன் ஒன்றாக இருந்து விட்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர்.

அதன்பின்னர் நடிகை அமலாபாலிடம் பவ்நிந்தர் சிங் தத் ஒன்றாக இருந்த புகைப்படத்தினை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக கூறி மிரட்டல் விடுத்தாகவும், பண மோசடி செய்ததாகவும், பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாக அமலா பால் தரப்பில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் கடந்த 26 ஆம் தேதி எஸ்பி ஸ்ரீநாதாவிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து முதலியார் சாவடியில் இருந்த பவீந்தர் சிங் தத்தை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

Views: - 235

0

1