சிறுமிக்கு கணக்கு சொல்லித் தருவதாக கூறி பாலியல் தொல்லை : போக்சோவுக்கு பயந்து POISON குடித்த பாடிசோடா!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2021, 4:19 pm
Harrasment Arrest -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : குஜிலியம்பாறை அருகே 12வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த நபர் போக்சோ சட்டம் பாய்ந்ததால் பயத்தில் விஷத்தை அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் பிரகாஷ் (வயது 31). அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து – நேருதேவி தம்பதியினருக்கு 12வயதில் மகள் உள்ளது.

இவர் கூடலூரில் தனியார் பள்ளியில் 8வது படித்து வருகிறார். பிரகாஷ் அந்த மாணவி தனியாக இருக்கும் போது அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு சென்று கணக்குப் பாடம் சொல்லித் தருவதாகக் கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக சொல்லப்படுகிறது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சிறுமியின் தந்தை மாரிமுத்துவிடம் கூறியுள்ளனர். இதையடுத்து மகளிடம் விசாரித்த போது அடிக்கடி பிரகாஷ் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து குஜிலியம்பாறை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் போரில் பிரகாஷ் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது.

அதனால் பதட்டம் அடைந்த பிரகாஷ் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 329

0

0