கொள்ளையர்களுக்கு ஏடிஎம் மெஷின் தந்த ஷாக் : பணம் இல்லாததால் ஏமாற்றம்.. போலீசார் விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan29 August 2021, 11:10 am
கன்னியாகுமரி : நாகர்கோவில் அருகே வங்கி ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி நடத்திய கொள்ளையன்கள் பணம் காலியானதால் கொள்ளையன் ஏமாற்றமடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வெள்ளைமடம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு உள்ள ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு அப்பகுதியினர் தகவல் தெரிந்ததை தொடர்ந்து அதிகாரிகள் போலீசாரை அழைத்து வந்து பார்த்தப்போது வங்கியின் வெளியே இருந்த ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
உடனே வங்கி அதிகாரிகள் பணத்தை சரிபார்த்த போது பணம் திருட்டு போகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டது. வாரக் கடைசி விடுமுறை நாள் என்பதால் வாடிக்கையாளர்கள் அதிகளவில் பணம் எடுத்து உள்ளதால் ஏடிஎம் எந்திரத்தில் பணம் காலியாகி உள்ளது.
இதனால் கொள்ளையன் மெஷினை உடைத்து பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் வடநாட்டு இளைஞர் செயல்பட்டு இருப்பதாக போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
0
0