கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த ‘ஷாக்‘: பதற வைத்த சிசிடிவி காட்சி!! (வீடியோ)

19 November 2020, 5:51 pm
Accident Dharmapuri - Updatenews360
Quick Share

தருமபுரி : மின்னல் வேகத்தில் வந்த இருசக்கர வாகனம் மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதிய காட்சி பதை பதைக்க வைத்துள்ளது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு அருகே உள்ள இந்திரா நகர் பகுதியை சேர்ந்த நந்தினி அவரது சகோதரி சர்மிளா இருவரும் அவரது தந்தை சக்திவேல் பணியாற்றும் தனியார் மில்லுக்கு மதிய உணவு அளிக்க தங்களது பைக்கில் சென்றனர்.

அப்போது சாலையை கடக்க முயன்ற போது பின்னால் அதிக வேகத்தில் பைக்கை ஓட்டி வந்த நார்த்தம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் முரளிதரன் என்பவர் சிறுமிகள் ஓட்டி வந்த பைக் மீது அதிவேகமாக வந்து மோதியதில் மூன்று பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் படுகாயமடைந்த மூன்று பேரையும் அருகே இருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லுõரி மருத்துவமனைக்கு சிகிச்சையளிக்க அழைத்து சென்றனர். இதில் தருமபுரியில் சிகிச்சைபெற்று வந்த இரண்டு சிறுமிகளும் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமவைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இது குறித்து அதியமான்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் விபத்து நடைபெற்ற சம்பவம் பதிவாகி, தற்போது வீடியோ சமூக வலையதலங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 0

0

0