பணிக்கு திரும்பிய காவல் ஆய்வாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

16 September 2020, 1:46 pm
Erode Inspector - updatenews360
Quick Share

ஈரோடு : கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த காவல் ஆய்வாளருக்கு மற்ற காவல்துறையினர் ஆராத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் காவல் நிலைய ஆய்வாளராக சோமசுந்தரம் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் காவல் ஆய்வாளர் சோமசுந்தரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து ஆய்வாளர் சோமசுந்தரம் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் வீட்டில் 7நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் பூரண குணமடைந்தார்.

இதையடுத்து இன்று மீண்டும் பணிக்கு திரும்பிய சோமசுந்தரத்திற்கு கோபி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல் உள்ளிட்ட காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்தும் ஆராத்தி எடுத்தும் கைத்தட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த காவலருக்கு சக காவலர்கள் உற்சாகப்படுத்திய சம்பவம் வரவேற்பை பெற்று வருகிறது.

Views: - 0

0

0