கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளராக பணி புரிந்து வந்த பானுமதி (52) இன்று காலை காமராஜர் ரோடு சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சரவணா பார்க்கிங் அருகில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது அப்போது எதிர்பாரவிதமாக எதிரே வந்த அரிசி மூட்டை ஏற்றி வந்த ஈச்சர் வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்து உள்ளார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலமாக கோவை காமராஜர் சாலையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆய்வாளர் பானுமதி இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனைக்காக உடல் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. ஆய்வாளர் பானுமதி உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே காவலர் உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பார்க்கவே பதை பதைக்க வைத்துள்ளது அந்த வீடியோ காட்சிகள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.