அரசு உத்தரவை மீறியதாக வேணு பிரியாணி கடைக்கு ரூபாய் 5000 அபராதம் விதிப்பு

Author: Udhayakumar Raman
26 June 2021, 7:35 pm
Quick Share

திண்டுக்கல்: தமிழக அரசு உத்தரவை மீறி திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள வேணு பிரியாணி கடைக்கு நகர் நல அலுவலர் மூலம் ரூபாய் 5000 அபராதம் விதிப்பு

தமிழகம் முழுவதும் வைரஸ் தொற்று காரணமாக தமிழக அரசு பல்வேறு தடை உத்தரவுகளை .அறிவித்து வருகிறது கடந்த மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. அதன்படி உணவு விடுதிகள் மற்றும் தேநீர் கடைகளுக்கு அமர்ந்து சாப்பிடுவதற்கு தற்போது வரை அனுமதி இல்லை என்று உத்தரவிட்டு இருந்தது. அதேபோல் உணவு விடுதியில் பார்சல் வகைகளை அனுமதிக்க உதரவு விட்ட நிலையில், தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அறிவித்த உத்தரவை காற்றில் பறக்க விட்டு திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு ரத வீதி பகுதியில் வேணு பிரியாணி கடை உள்ளது. இந்த கடைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பிரியாணி சாப்பிடுவதற்காக வருவது வழக்கம்.

இந்நிலையில் தமிழக அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்டு பிரியாணி கடை சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒரே நேரத்தில் 200 க்கும் மேற்பட்ட அவரை அமரவைத்து முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்த காரணத்தினால் திண்டுக்கல் மாநகராட்சி நகர்நல அலுவலருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அங்கு வந்த நகர்நல அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பிரியாணி கடை ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு உள்ளீர்கள். ஆகவே உங்களது உணவு விடுதிக்கு ரூபாய் 5,000 அபராதம் விதித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் நகர்வலம் அலுவலர் பேசுகையில், மீண்டும் இதே போன்று தமிழக அரசின் நெறிமுறைகளை கடைபிடிக்க வண்ணம் செயல்படும் கடைகளுக்கு சீல் வைத்து சூட்டப்படும் என்று தெரிவித்தார்.

Views: - 242

0

0